முடி உதிர்வதை தடுக்கும் அதிசய இயற்கை உணவு பொருள்!

தினமும் கொத்து கொத்தாக முடி உதிர்வதை நினைத்து அதிக மன வேதனை அடையும் பெண்கள் நாளுக்கு நாள் அதிகமாகி செல்கின்றனர்.

உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையில் உள்ளது.

உங்கள் கூந்தல் உதிர்வதைக் கட்டுப்படுத்தும் அந்த சிறப்பான பொருள் பூண்டும், இஞ்சியும் தான். இவை இரண்டும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த சிறப்பான முறையில் செயல்புரிகிறது.

இஞ்சி மற்றும் பூண்டு கலவை
  • இஞ்சியுடன் பூண்டை சேர்த்து, முடி உதிர்வதைக் குறைக்கலாம். 2 மிதமான அளவு இஞ்சித் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
  • 8 பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும்.
  • இரண்டையும் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  • இஞ்சி பூண்டு விழுது தயாரித்து ஒரு புறம் வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு எண்ணெய்யை எடுத்து ஒரு பேனில் ஊற்றி சூடாக்கவும்.
  • இந்த எண்ணெயில் அரைத்து வைத்த விழுதைச் சேர்க்கவும். இந்த விழுது பழுப்பு நிறமாக மாறும் வரை சூடாக்கவும்.
  • பிறகு இந்த கலவையை ஆற விடவும். இந்த கலவை முற்றிலும் ஆறியவுடன், இஞ்சி பூண்டு விழுதை எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கவும்.
எப்படி பயன்படுத்துவது?

பிறகு இந்த எண்ணெய்யை தலைமுடியில் தடவி, மென்மையாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த செய்முறையைப் பின்பற்றவும். தொடக்கத்தில் பூண்டை தலைமுடிக்கு பயன்படுத்தும்போது லேசான எரிச்சல் ஏற்படலாம்.

ஒருவேளை அதிக எரிச்சல் ஏற்பட்டால், அதனைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவும். பூண்டு எண்ணெய்யை நேரடியாக தலையில் தடவுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Sharing is caring!