முடி உதிர்வு பிரச்னையா? இந்த எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்திப் பாருங்கள்!

மன அழுத்தம், வேலைப்பளு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளால் முடி உதிர்வு பிரச்னைகள் ஏற்படுகின்றன. முடி உதிர்வு என்பது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை. எத்தனையோ முறைகளை பின்பற்றியும் சிலருக்கு நல்ல பலன் கிடைக்காமல் போயிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் நடிகை ஜூஹி பார்மர் பகிர்ந்துள்ள இந்த எண்ணெய் செய்முறையை முயற்சித்து பயன்படுத்திப் பாருங்கள். வீட்டு வைத்தியங்களின் முக்கியத்துவதை வலியுறுத்தி வரும் அந்த நடிகை தற்போது தலைமுடி பிரச்னைக்கு ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.முடி உதிர்வு, பொடுகு, முடி வலிமை குறைதல் பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் சிறப்பான பலனை தரும் என கூறுகிறார்.

இந்த எண்ணெயை தான் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் நல்ல பலன் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். இதில் ரசாயனங்கள் எதுவும் கலக்கப்படவில்லை. அதனால் இது முற்றிலும் பாதுகாப்பானது என அவர் கூறுகிறார். அதை எப்படி தயார் செய்ய வேண்டும் என இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய், 3 டீஸ்பூன், வெந்தயம், 3 டீஸ்பூன், வெங்காய விதைகள்

செய்முறை:

வெங்காய விதைகள் மற்றும் வெந்தயத்தை மிக்ஸியில் தனித்தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு சிறிய பாத்திரம் ஒன்றில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைத்து விடுங்கள். எண்ணெயில் 2 பொடிகளையும் சேர்க்கவும். குறைந்த தீயில், சுமார் 1 மணி நேரம் இந்த கலவையை கொதிக்க வைக்கவும். அடிக்கடி அதனை கிளறிக் கொண்டே இருங்கள். தூள் நன்றாக எண்ணெயில் கலந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும். அதன்பிறகு எண்ணெயை வடிகட்டி பாட்டில் ஒன்றில் ஊற்றி காற்றுபுகாத வண்ணம் இறுக்கமாக மூடி பயன்படுத்தவும்.

மருத்துவ குணங்கள்:

முடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க வெங்காய விதைகள் உதவும். இது பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டது. முடி உதிர்வதை குறைப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காய விதைகளில் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளன. அவை முடி நன்றாக வளர்வதற்கு உதவும். வெந்தய விதைகளில் அதிக அளவிலான புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது. அவை முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்னைக்கு எதிராக போராடும். முடி வறட்சியாக இருப்பதை குறைக்க முடியும். மேலும் முடிக்கு தேவையான வலிமையை வெந்தயம் கொடுக்கிறது.தலைமுடியை வலுவாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்திருக்க தேங்காய் எண்ணெய் உதவும். இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தலாம் என நடிகை ஜூஹி பார்மர் கூறுகிறார். 3 முதல் நான்கு வாரங்களில் உங்கள் தலைமுடியில் நல்ல மாற்றம் தெரியும் என்கிறார். நீங்களும் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

Sharing is caring!