முடி உதிர்வை தடுக்க முத்தான ஆலோசனை!

ஒருவரின் கூந்தலின் ஆரோக்கியம், அவரின் உடல் ஆரோக்கியத்தை சார்ந்தது. பொதுவாகவே, ஒவ்வொருவருடைய கூந்தலிலும், ஒரு காற்றழுத்தமானி உள்ளது. இது கூந்தலில் உள்ள குறைகள் மற்றும் கூந்தலின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டும். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் போஷாக்கு குறைபாடாலேயே முடி உதிர்வு நிகழ்கிறது.

கூந்தல் இழப்பு என்பது சாதரணமான ஓன்றுதான். எனவே, ஒவ்வொரு நாளும், 150 முடிகள் கொட்டுவது மிக சாதரணமானது. மேற்சொன்ன எண்ணிக்கையில் இருந்து மீறும்போது, அது நோய்க்காரணிக்குரிய கூந்தல் இழப்பாக இருக்கலாம். உற்சாகமான வாழ்க்கை முறையிலிருந்து, இருக்கமான வாழ்க்கை முறைக்கு மாறுவதன் மூலம், கூந்தல் உதிர்வு ஏற்படலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு, “மெலனின்” (melanin) போன்ற ஹார்மோன் பிரச்சினைகள் என பல சிக்கல்கள் இருக்கலாம். இவையெல்லாம் ஒரு மரபணு சார்ந்த பிரச்சனையாகவும், வயது முதிர்வின் காரணமாகவும் ஏற்படலாம்.

குறிப்பாக, மன அழுத்தம், சோர்வு மற்றும் சில ரசாயனங்கள் கலந்த பொருட்கள் பயன்பட்டால் ஏற்படும் ஒவ்வாமையால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனவே, ஷாம்பு மற்றும் கண்டிஷனரை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
கூந்தலில் அதிகப்படியான வெயில் படும்போதும், ஹீட்டர் பயன்பட்டாலும் கூந்தல் இழை பிளவுபட வாய்ப்புள்ளது. தூங்கி எழும்போது தலையணையில் முடி உதிர்தல், தலையை கவிழ்க்கும்போது உதிர்தல் போன்றவை முடியில் ஏற்படும், பிளவுளால் மட்டுமே ஏற்படுகிறது.

Sharing is caring!