முறையான தாடி வளர்க்கும் சிறந்த வழி

பெண்களை மயக்க ஆண்கள் கையாளும் முறை தான் இந்த தாடியும் மீசையும். அதிலும் இப்போதெல்லாம் தாடியும் மீசையும் வச்சிருக்கிற ஆண்களைத் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கவும் செய்கிறது. சரியான தாடி ஸ்டைல் ஆண்களுக்கு ஒரு நேர்த்தியான லுக்கை கொடுக்கும் என்பது உண்மையே. ஒவ்வொருத்தர் முகத்திற்கு தகுந்த மாதிரி ஸ்டைலான பியர்டு தான் ஆண்களுக்கு அழகு. அப்பொழுது தான் அது உங்கள் முகத்திற்கும் உங்கள் தோற்றத்திற்கும் கச்சிதமாக பொருந்தும்.

நிறைய ஆண்கள் படத்தில் வரும் ஹூரோக்கள் தாடி வைத்திருந்தால் அந்த ஸ்டைலை ஃப்லோ செய்வது தற்போதுள்ள ட்ரெண்ட்டை ஃப்லோ செய்வது போன்றவற்றை செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அது உங்களுக்கு பொருந்துமா? என்பதை ஆண்கள் பார்ப்பதில்லை. இப்படியெல்லாம் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்று தான் நாங்கள் உங்களுக்கு இங்கே சில பியர்டு ஸ்டைல் வகைகளை கூற உள்ளோம். கண்டிப்பாக இது உங்களுக்கு பலனளிக்கும்.

கச்சிதமான தாடி: தாடியை நீங்கள் பல்வேறு வடிவங்கள், நீளங்கள் ஏன் ஸ்டைல்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அது உங்களுக்கு அழகாக இருக்கிறதா என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். இதற்கு நீங்கள் பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உங்கள் முக வடிவம், ஹேர்ஸ்டைல், டிரஸ்ஸிங் ஸ்டைல், தாடி வளர்க்க தேவையான நேரம் இப்படி எல்லாவற்றையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இது போக அதை சரியாக பராமரிக்க சீர்படுத்த வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் எதிர்பார்க்கிற லுக் கிடைக்கும். உங்களுக்காக நாங்கள் 10 புதுவிதமான தாடி ஸ்டைல்கள் குறித்து கூற உள்ளோம்.

சர்க்கிள் பியர்டு: இந்த அமைப்பில் மீசையும், கன்னப் பட்டையும் ஒன்றாக இணைந்து ஒரு வட்ட வடிவில் காட்சியளிக்கும். இதற்கு பிரெஞ்ச் பியர்டு என்ற பெயரும் உண்டு. இந்த தாடி அமைப்பு எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்று. இந்த தாடி பாணியை நடுத்தர வயது ஆண்களிலிருந்து, டீன் ஏஜ் வயதுக்காரர்கள், அலுவலக ஆண்கள் என்று எல்லோரும் விரும்பி வைக்கிறார்கள். இந்த தாடியை கச்சிதமாக பெற முதலில் உங்கள் மீசையும் தாடியை யும் நன்றாக வளர விட்டு ஒன்றாக்க வேண்டும்.

பந்தோல்ஸ் பியர்டு: இது பார்ப்பதற்கு ஒரு கரடு முரடான தாடி ஸ்டைல் ஆகும். இது வைக்க நிறைய பொறுமை இருக்க வேண்டும் ஆண்களே. காரணம் சில மாதங்களுக்கு முடியை நன்றாக வளர்க்க வேண்டும். முதல்ல எடுத்தவுடனே இந்த ஸ்டைல் அழகாக இருக்காது. ஆனால் போகப் போக கச்சிதமாக மாறி விடும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கப்படும்.

குறுந்தாடி: இது பார்ப்பதற்கு ஆட்டு தாடி மாதிரி இருக்கும். இந்த தாடி யின் ஸ்பெஷல் என்னவென்றால் உங்கள் விருப்பத்திற்கிணங்க மீசையின் நீளம் மற்றும் தாடியை தேர்வு செய்யலாம். மீசையை விட்டு விட்டு கன்னம் வரைக் கூட நீங்கள் இணைத்து கொள்ளலாம்.ஆட்டு தாடி போல் இருப்பதால் இதை கோட்டு என்கிறார்கள்.

நீட்டிக்கப்பட்ட குறுந்தாடி: இதுவும் ஆட்டு தாடி போன்று தான் ஆனால் கொஞ்சம் நீட்டிக்கப்படும். இதற்கு தாடி மற்றும் மீசையை கொஞ்சம் வளர விட்டு இணைக்க வேண்டும். அதே நேரத்தில் படத்தில் காட்டியுள்ளவாறு கீழ் உதட்டிற்கு கீழே பக்கவாட்டில் உள்ள முடிகளை அகற்றி விடுங்கள்.

சிறிய தாடி: மீசையில்லாமல் தாடையில் சிறியதாக வைக்கும் தாடி தான் இது. இந்த தாடியை பெரும்பாலும் இளைஞர்கள் வட்டாரம் வைப்பார்கள். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், டீன் ஏஜ் பசங்க போன்றவர்கள்.

வான் டைக் பியர்டு: இது ஒரு ஜென்டில்மேன் டைப் தாடி. இந்த தாடி ஸ்டைல் பிளெமிஷ் ஓவியர் அந்தோணி வான் டைக் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. இந்த தாடி ஸ்டைலில் மீசை மற்றும் தாடி ஒரு முக்கோண வடிவத்தில் உள்ளது. ஜானி டெப் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் போன்ற பிரபலங்கள் இந்த தாடி பாணியை வைத்து தான் கலக்கி வருகிறார்கள்.

ஸ்டப்பிள்: இது ரெம்ப நார்மலான தாடி ஸ்டைல். ஆனால் லேசான வளைவுகள் உங்கள் முகத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும். ஆனால் இதை நீங்கள் நன்றாக பராமரிக்க வேண்டும். அப்பொழுது தான் இதை ஈஸியாக கையாள முடியும்

மீடியம் ஸ்டப்பிள்: உங்களுக்கு தாடி அதிகமாக வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் மீடியம் ஸ்டப்பிள் ஸ்டைலை எடுத்துக் கொள்ளலாம். நடுத்தரமான தாடியைப் பெற நீங்கள் தாடியை கத்தரிக்காமல் ட்ரிம் செய்து கொள்ளலாம். இது ஒரு ஆடம்பரமான லுக்கை கொடுக்கும்.

பாக்ஸ்டு பியர்டு: தாடியை நீண்ட நேரம் பராமரிக்க முடியாது என்று நினைத்தால் அதற்கு இந்த ஸ்டைல் ஏதுவாக இருக்கும். இதை எளிதாக பராமரிக்க முடியும். நல்லா முழுவதுமா மீசை, தாடி வளர்ந்த பிறகு ட்ரிம் செய்து கச்சிதமாக மாற்றிக் கொள்ளலாம்.

ஆங்கர் பியர்டு: இதில் தாடியும் மீசையும் இணைக்கப்படும். தாடையில் உள்ள தாடி ஒரு கோடு மாறி அதனுடன் சேர்க்கப்படும். இதைச் சரியாக துல்லியமாக செய்தால் பார்ப்பதற்கு அசத்தலாக இருக்கும். இது உங்களுக்கு ஒரு தனித்துவமான லுக்கை கொடுக்கும்.

Sharing is caring!