மூக்கில் வரும் கரும்புள்ளியை எளிதில் போக்க வேண்டுமா?

பொதுவாக நமக்கு முகம் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு முகத்திலுள்ள மூக்கும் முக்கியமாக உள்ளது.

இந்த கரும்புள்ளிகள் முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு வரும்.

இது பார்ப்பதற்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் முள்ளு முள்ளாக இருக்கும்.

இவை மூக்கின் மேல் ஏற்படுவதால் மொத்த முகமும் பொலிவிழந்து தோற்றமளிக்கும்.

அந்தவகையில் தற்போது இந்த கரும்புள்ளிகளை போக்க என்னென்ன செய்யலாம் என பார்ப்போம்.

  • தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.
  • தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் போய்விடும்.
  • சுடுநீரில் மூலிகைகளான லாவெண்டர், எலுமிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து, ஆவிப்பிடித்து சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், கரும்புள்ளிகளும் விரைவில் மறையும்.
  • எலுமிச்சையை மூக்கின் மேல் தேய்த்தால், சருமத்துளைகளானது திறந்து, கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.
  • கருப்பு நிற காராமணியை பொடி செய்து, பின் அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் கரும்புள்ளிகளைப் போக்கலாம்

Sharing is caring!