மென்மையிழந்த சருமத்திற்கு விடுதலை வேண்டுமா?

அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.

இதற்காக சந்தையில் விற்பனை ஆகும் கண்ட கண்ட அழகை அதிகரிக்கும் கிறீம்களை வாங்கி பயன்படுத்துண்டு.

அப்படி அழகை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர்.

ரோஸ் வாட்டர் சரும அழகிற்கு பெரிதும் உதவி புரிகின்றது. இதனை அன்றாடம் பயன்படுத்தியே உங்கள் அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கலாம்.

அந்தவகையில் அழகை அதிகரிக்க ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

  • முகம் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும் போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
  • ரோஸ் வாட்டர் ப்ரிட்ஜில் வைத்து, அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்கள் அழகாக காணப்படும்.
  • தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
  • ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாகவும் காட்டும்.
  • வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறும்.

Sharing is caring!