ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா?

முகத்திற்கு அழகூட்டுவது உதடுகள் தான். பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்ற காரணங்களால் வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் ஏற்பட்டு முக அழகையே அது கெடுத்துவிடும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு அதிகமாக எதையும் தாங்க முடியாது.

அதுமட்டும் இல்லாமல். உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் சருமம் 28 நாட்களுக்கு ஒரு முறை இறந்த செல்களை இழந்து புதிய செல்களை உருவாக்கிக் கொள்ளும். ஆனால் உதட்டு பகுதியில், புதிய செல்களை உருவாக்குவதற்கு மாத கணக்கில் ஆகும். மேலும் சில வெடிப்புகள் உடலில் நீர் வறட்சி மற்றும் சோப்புகளை பயன்படுத்துவதினாலும் ஏற்படுகின்றன.

அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், தொட்டால் வலிப்பது மட்டுமின்றி, உதட்டின் நிறம் மங்கி கருமையாகிவிடும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு, உதட்டை இயற்கை முறையில் சரியாக பராமரிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு உதட்டிற்கு சாயம் பூசுவதனால் மட்டும், உதட்டிற்கு நிறத்தை கொடுத்து விட முடியாது.

இயற்கையாகவே உதடு பளபளப்பாகவும், இளஞ்சிவப்பாகவும் இருத்தலே கொள்ளை அழகு. அவ்வாறு உதடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோர், உடலின் மற்ற பாகங்களை கவனிப்பது போல உதட்டை கவனிப்பதில்லை.

எனவே உதடு விரைவிலே கவனிப்பு இல்லாமல், இயற்கையான நிறத்தை இழந்துவிடும். பொதுவாக உதடுகளை பராமரிக்க நீண்ட நேரம் பிடிக்க போவதில்லை, ஒரு நாளில் மூன்று முதல் நான்கு நிமிடங்களே ஆகும். எனவே உதடுகளை சரியாகவும், எளிய முறையிலும் பராமரித்து, அதை இளஞ்சிவப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

உதடுகளை தேய்த்தல்

தினமும் பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு உதட்டையும் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உதட்டில் தங்கியுள்ள தூசிகள், காய்ந்து போன எச்சில் மற்றும் அழுக்கானது நீங்கி, உதடு சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும்.

மசாஜ்

உடலின் எந்த பகுதியிலும் செய்யக்கூடிய பழமையான முறை மசாஜ் ஆகும். ஆகவே பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து, அவ்வப்போது உதட்டிற்கு மசாஜ் செய்யலாம். அதிலும் இந்த மசாஜை, தினம் இரவு தூங்கும் முன்பு உதட்டிற்கு செய்யலாம்.

சர்க்கரை உரிதல்

சர்க்கரை படிகங்கள் ஒரு சிறந்த தேய்ப்பான். எனவே ஆலிவ் எண்ணெய் அல்லது பாலாடையுடன் சிறிது சர்க்கரை கலந்து உதட்டில் மென்மையாக தேய்த்து, சிறிது நேரம் விட்டு பின்பு அதை மெதுவாக தேய்த்து நீக்கலாம். இவ்வாறு செய்வதால், உதட்டை ஈரப்பசையுடன் வைத்திருக்கலாம்.

மாதுளை செய்யும் மாயம்

உதட்டின் மேல் மாதுளை செய்யக்கூடிய மாயத்தை, அதன் நிறத்தை கொண்டே தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஒரு கிண்ணத்தில் மாதுளை விதைகளை எடுத்து கொண்டு, அதை அரைத்து, அதனுடன் சீஸ் சேர்த்து கலந்து, ஒரு பசை போல் செய்து, உதட்டில் தடவ வேண்டும்.

சிறிது நேரம் கழித்து கழுவினால், இதன் பலனை கண்கூடாக காணலாம். இவ்வாறு தினசரி செய்வதன் மூலம் உதடுகள் இளஞ்சிவப்பாகவும், பளபளப்பாகவும் மாறும்.

சீஸ்

சீஸ் அல்லது சூரிய காந்தி எண்ணெயில் எலுமிச்சை சாற்றை கலந்து சிறிது உதட்டில் தடவினால், உடனடி பலனை காணலாம். இம்முறை பலகாலமாக இருந்து வரும் ஒரு முறையாகும். அதிலும் ஒரு இரவில் இவ்வாறு செய்தல் மூலமே நல்ல பலனை காண முடியும்.

ரோஜா இதழ்

Sharing is caring!