வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பொருட்களை கலந்து இப்படி தடவினா போதும்!

இறையாய் காலகட்டத்தில் ஆண், பெண் இருவருக்குமே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே முடி உதிர்வுதான்.

நமது அழகை எப்பொழுதுமே தூக்கலாக காட்டுவது நமது கூந்தல்தான். எத்தனையோ குறிப்புகள் விலையுயர்ந்த மருந்துகள் வாங்கி பயன்படுத்தியும் முடி வளர்ச்சி பெறவில்லை என்ற கவலை சிலருக்கு உள்ளது.

உங்களுக்கான சிறந்த தீர்வாக வைட்டமின் ஈ மாத்திரைகள் உதவும். அத்துடன் சில பொருட்களை சேர்த்து பன்படுத்துங்கள்.

வைட்டமின் ஈ, தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் இவை அனைத்தும் கலந்த கலவை முடியை ஆரோக்கியமாக மாற்றி உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைப்பதால் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்
  • 2 வைட்டமின் ஈ மாத்திரைகள்
  • ஒரு தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய்
  • ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய்
  • ஒரு தேக்கரண்டியளவு ஆமணக்கு எண்ணெய் மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய்

முதலில் வைட்டமின் ஈ மாத்திரையிலிருந்து எண்ணெயை வெளியே எடுத்து பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றுடன் கலக்குங்கள்.

இந்த கலவையை முடி முழுவதும் தடவி ஒரு நாள் இரவு வரை விட்டுவிடுங்கள். அடுத்த நாள் காலையில் நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள்.

இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். தொடர்ந்து செய்தால் பொடுகு முழுசா நீங்கி முடி கிடு கிடுனு வளர்ந்து அலைப்பாயும்.

Sharing is caring!