வாழைப்பழத் தோலின் அதிசயம்

வாழைப்பழத் தோலின் அதிசயம் தோலை மட்டும் நீரில் கொதிக்க வைத்து குடியுங்கள்

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஆனால் வாழைப்பழத்தை விட அதன் தோலில் அதிக நன்மைகள் உள்ளது.

அதனால் வாழைப்பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை குடித்து வந்தால் சரும பிரச்சனைகள் முதல் மனநோய் வரை நல்ல பலனை பெறலாம்.

நன்மைகள்
பற்களில் வாழைப்பழ தோலை வைத்து தினமும் காலையில் தேய்த்து வந்தால் பற்கள் வெண்மையாகுவதுடன், பற்கள் சார்ந்த பிரச்சனைகளும் வராது.

சருமத்தில் வறண்ட பகுதிகள் உள்ள இடத்தில் வாழைப்பழத்தின் தோலை வைத்து நன்றாக தினமும் தேய்த்து வர வறண்ட சருமம் விரைவில் மறையும்.

வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர மன அழுத்தம் குறையும்.
மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத்தின் தோலை வைத்து நன்றாக தேய்த்தால், மருக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவாமல் தடுக்கலாம்.

மூட்டை பூச்சிகள் போன்ற பூச்சிகள் கடித்து விட்டால் அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும். அதை தடுக்க வாழைப்பழத்தின் தோலை வைத்து அந்த இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும்.

வாழைப்பழத்தின் தோலை தீக்காயம் பட்ட இடங்களில் 20-30 நிமிடங்கள் வைத்து தேய்த்து இரவு முழுவது வைத்திருந்தால், அந்த இடத்தில் குளிர்ச்சி உண்டாகும்.

வாழைப்பழத்தோல் கண்களுக்கு குளிர்ச்சியை தரும். அதனால் இந்த வாழைப்பழத் தோலை கண்களின் மீது வைத்திருப்பதால் கண்களை குளிர்ச்சியாக்கலாம்.

முகத்தில் பருக்கள் உள்ள இடத்தின் மீது மிருதுவாக வாழைப்பழத்தின் தோலை வைத்து தேய்த்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.

வாழைப்பழ தோலை நேரடியாக வலி உள்ள இடங்களில் வைத்து தேய்த்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டால் வலி விரைவில் குறைந்து விடும்.

சொரியாசிஸ் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழைப்பழ தோலை வைத்தால், அதன் அரிப்புகள் விரைவில் குணமாகும்.

ஷூக்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் பளிச்சிட அதன் மீது வாழைப்பழ தோலை வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.
சூரிய கதிர்களால் உண்டாகும் கருமை பாதிப்புகளை நீக்க வாழைப்பழத்தின் தோலை கொண்டு முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

Sharing is caring!