விரல்களுக்கு புத்துணர்வு அளிக்கும் சிறந்த சிகிச்சை மெனிக்யூர்

Manicurist polishing fingernails with marsala color

மெனிக்யூர் (manicure) என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல, நமது கைகளையும், கைவிரல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாகும்.

மெனிக்யூர் என்பது கை, விரல், நகம் ஒப்பனைக் கலையாகும். முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களை கவரும் பாகம் என்னவென்றால் அது கைகள் தான். ஏனெனில் முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களின் பார்வைக்கு வெளிப்புறம் சட்டென தெரிவது கைகளும், விரல் நகங்களாகும். இவற்றை பராமரிக்கும் வழிதான் மெனிகியூர்.

இதனை அழகு நிலையங்களுக்கு சென்று அதிக பணம் செலவழித்து தான் செய்யவேண்டும் என்பது அல்ல, வீட்டில் இருந்தபடியே எளிதாக நாம் செய்யாலாம். எப்படி செய்வது என்பது குறித்து இங்கு விரிவாக காண்போம்.

முதலில் கைவிரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால் அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப நகங்களை சேவ் செய்து வடிவமைத்து கொள்ளவும். நீளமான நகங்களை நீங்கள் வைக்க நினைத்தால் அது எளிதில் உடைய வாய்ப்புள்ளதால் மீடியமான வடிவத்தில் நகத்தை வெட்டிக் கொள்ளுங்கள்.

பின்னர் கைவிரல் நகங்களில் உள்ள க்யூட்டிக்கல்ஸில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதினால் கைவிரல் நகங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் ஷாம்பு மற்றும் ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்கள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

இந்த கலவையில் உங்கள் இரண்டு கைகளையும் நனைத்து 10 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். ஊறிய பிறகு கைவிரல் நகங்களை ஒரு டூத் பிரஷை கொண்டு சிறிது நேரம் தேய்த்து சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதினால் கைவிரல் நகங்களில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கி விடும்.

Sharing is caring!