2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்!

நாம் அளவுக்கு அதிகமாக எடை கூடி விட்டால், கூடவே பரிசாக தொப்பையும் கிடைத்து விடும். தொப்பையை போக்க ஏராளமான வழிமுறைகள் இருந்தாலும் அதில் சிறந்த வழி இயற்கை முறையே.

எண்ணெய்யை கொண்டு கூட நம்மால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதே இதில் ஆச்சரியமான விஷயம்.

இந்த பதிவில் எப்படி ஆலிவ் எண்ணெய்யை வைத்து உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஆலிவ் எண்ணெய்யில் பலவிதமான நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் வைட்டமின் ஈ, பாலிபீனால்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் உள்ளது.

ஜெரிமான பிரச்சினை கொண்டோருக்கு ஆலிவ் எண்ணெய் சிறந்த மருந்தாகும். மேலும், உடல் எடையை குறைக்க ஆலிவ் பயன்படுத்தினாலே போதும்.

காலை நேரத்தில் எழுந்தவுடனே ஆலிவ் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தினால் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம்.

மேலும், கெட்ட கொழுப்புக்களையும் இந்த வைத்தியம் கரைத்து விட கூடிய தன்மை கொண்டதாம்.

தேவையானவை
  • ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
  • எலுமிச்சை 1/2
  • வெதுவெதுப்பான நீர் 1 கப்
செய்முறை

முதலில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி கொண்டு காலை வேளையில் குடித்து வரவும். இவ்வாறு 2 அல்லது 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வரும்போது, உடல் எடை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

ஆலிவ் மசாஜ்

மற்ற எண்ணெய்யை கொண்டு செய்யப்படும் மசாஜை விட ஆலிவ் எண்ணெய் மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்கு ஒரு சில முக்கிய எண்ணெய்யின் பங்கும் தேவை.

  1. 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
  2. 1 ஸ்பூன் கடுகு எண்ணெய்
  3. 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை
  • மேற்சொன்ன மூன்று எண்ணெய்களையும் நன்கு கலந்து கொண்டு, சிறிது நிமிடம் மிதமான சூடு செய்யவும்.
  • பிறகு இதனை வயிற்றில் தடவி 10 நிமிடம் வரை மசாஜ் செய்யவும். இதன்பின், அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
  • இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் தொப்பையில் உள்ள கொழுப்பு குறைந்து கச்சிதமாக இருப்பீர்கள்.

Sharing is caring!