முகத்தில் முகப்பருவா? இதை போக்க வெற்றிலையை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது சித்தமருத்துவம் முதல் இன்று வரை இது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பெரிதும் உதவுகின்றது.

ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முகப்பரு, பொடுகு, முடி உதிர்வது போன்றவற்றிற்கும் தீர்வளிக்கின்றது.

அந்தவகையில் எப்படி முகத்திற்கு வெற்றிலையை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

  • வெற்றிலையை நன்றாக அரைத்து நல்லெண்ணெய்யுடன் குழைத்து கூந்தல் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்துவிடவும். பின்பு சிறிது நேரம் கழித்து, குளித்து விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
  •   வெற்றிலையை அரைத்து அத்துடன் பச்சை கற்பூரம், துளசி இலை சாற்றை கலந்து தலையில் நன்றாக தேய்த்து விடவும். சிறிது நேரம் கழித்து கூந்தலை கழுவி விடலாம். பொடுகு காணாமல் போய்விடும்.
  • இரண்டு, மூன்று வெற்றிலையை விழுதாக அரைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி விட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். நாளடைவில் முகப்பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போய்விடும்.
  •  வெற்றிலை சாறை கொண்டு முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் மீண்டும் வராது.
  •  உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தையும் வெற்றிலை நீக்கக்கூடியது. கொதிக்கும் நீரில் வெற்றிலையை கலந்து அந்த சாறை வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்துவிட்டு குளிக்கலாம். வியர்வை நாற்றம் அடியோடு அகலும்.
  • அணியும் உடைகளில் படிந்திருக்கும் வியர்வை நாற்றத்தை நீக்குவதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். வெற்றிலை சாறு கலந்திருக்கும் நீரில் ஆடைகளை முக்கி உலர்த்தலாம்.

Sharing is caring!