கழுத்தின் கருமையை போக்கும் பீட்ரூட் பேக்

கழுத்தின் கருமை நமது அழகினைப் பாழ்படுத்துவதாக இருக்கும். இப்போது நாம் கழுத்தின் கருமையைச் சரிசெய்யும் பீட்ரூட் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பீட்ரூட்- 1 துண்டு
தேன்- 2 ஸ்பூன்
தயிர்- 2 ஸ்பூன்

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் பீட்ரூட்டுடன் தயிர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையில் தேன் சேர்த்தால் பீட்ரூட் பேக் ரெடி. இதை வாரம் இருமுறை இந்த பீட்ரூட் பேக்கை கழுத்தில் தடவி வர கருமை மறைந்து அழகு மிளிரும்.

Sharing is caring!