பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய் இளமையை பாதுகாக்கும்

இளமையை பாதுகாக்க விரும்புகிறவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்த தீர்வாக உள்ளது. ஆமணக்கு எண்ணெயில் இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த எண்ணெய்யை ஒரு சில இயற்கை பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தினால் இளமை மாறாமல் அப்படியே இருக்கலாம்.

1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்ட அதை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். இதை அரை மணி நேரம் சென்று கழுவி விடலாம். இந்த முறையை 1 நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் இளமையை அப்படியே பாதுகாக்கலாம்.

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும்.

1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் சுருக்கங்கள் மருந்து இளமையை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள்.

1 ஸ்பூன் மஞ்சளை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவி சிறப்பான முறையில் மசாஜ் கொடுக்கவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு உங்களின் முகத்தை பொலிவாக்கத்துவதுடன், இளமையாகவும் வைத்து கொள்ளும்.

Sharing is caring!