அழகான தோற்றம் பெற செய்யும் கிளாசிக் ஹேர்ஸ்டைல்

கிளாசிக் ஹேர் ஸ்டைல்களை ஒன்றாக சேர்த்து, அவற்றுக்கு ஒரு புதிய டிவிஸ்டைச் சேர்த்து, அட்டகாசமாக தோற்றத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

உங்கள் கூந்தலில், ரிப்பேர் சீரமைப் பூசவும். மெல்லிய கூந்தலாக இருந்தால், அதை மிகையாக்கி காண்பிக்க, சீ சால்ட் ஸ்பிரே அல்லது டெக்சரைசரை தெளிக்கவும். உங்கள் கூந்தலை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு, சிறிய பின்னல்களாக பின்னிக் கொள்ளவும், முனைகளில் ரப்பர் பேண்டுகளைப் போடவும். இரண்டு பின்னல்களையும் மேல்நோக்கி வைக்கவும்.

இரண்டு பின்னல்களையும் ஒன்றாக பிணைத்து, உச்சி கொண்டையாக பின்னவும். ஹேர் பின்களைப் பயன்படுத்தி, பின்னலால் செய்த கொண்டையை பிடித்து வைக்கவும். உங்களுடைய தலையின் உச்சியில் உள்ள முடியானது, இந்த செயல்முறையில் அதிக சிக்கடைந்து விடலாம், ஆனால், ஃபிக்ஸிங் மூஸ் அல்லது தண்ணீரைப் பயன்படுத்தியாவது, இந்த இழைகளை சீர் செய்யவும்.

உங்கள் கையில் கொஞ்சம் மூஸை கொட்டி, அதை உச்சியில் பூசவும். தலையின் எல்லா பக்கங்களில் இருந்தும் சீப்பால் வாரி விட்டால், சீரான தோற்றம் கிடைக்கும். உங்கள் ஹேர்ஸ்டைலுக்குப் பொருத்தமாக, கொஞ்சம் ப்ரோன்ஸ் ஐஷேடோவை, உங்கள் இமைகளின் விளிம்பில் பூசவும். கோரல் லிப் நிறத்தில், கொஞ்சம் உங்கள் உதடுகளில் பூசிக் கொள்ளவும். பீச் நிற பிளஷைப் பூசி முடிக்கவும்.

Sharing is caring!