இன்று முதல் சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும்; மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் இன்று முதல் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மக்களை சூறையாடி வருகிறது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. ஊரடங்கில் காய்கறி கடைகள், அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் மக்கள் அத்தியாவசியமின்றி வெளியே சுற்றி திரிவது குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக காவல் ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், ஊரடங்கை கண்டு அச்சப்படும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் தெரிவித்துள்ளார்.

12 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் சீல் வைக்கப்படும் என தெரிவித்தார். ஊரடங்கு முறையாக கண்காணிக்கப்படுவதில்லை என காவல் ஆணையர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Sharing is caring!