கழுத்தின் அழகிற்கு செய்ய வேண்டிய பயிற்சிகள்

உடல் பருமன் கொண்டவர்களின் கழுத்தை சுற்றிலும் அதிக சதை வளர்ச்சி ஏற்படும். அது கழுத்தின் அழகை குறைக்கும். தகுந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் கழுத்தை அதுகாக மாற்ற முடியும்.

அழகில் அக்கடை கொண்ட பலரும், முகம், கை, கால்களுக்கான பாராமரிப்புகளை மட்டுமே தினமும் மேற்கொள்கிறார்கள். கழுத்துப்பகுதிக்கான பராமரிப்பில் கவனம் செலுத்துவதில்லை. தலை மற்றும் உடலை இணைக்கும் முக்கியமான உறுப்பாக விளங்கும் கழுத்தை முகத்தை போல் பராமரிப்பது அவசியம். இல்லாவிட்டால் கழுத்தை சுற்றிலும் உள்ள சருமத்தின் நிறம் கருமையாக மாறி விடும்.

முகத்துக்கு பேஷியல் செய்யும் போது கழுத்துப் பகுதிக்கும் செய்ய வேண்டும். அடிக்கடி சோப் கொண்டு சுத்தம் செய்தால் கருமை நிறம் நீங்கும் மேலும் அவ்வப்போது சிறிது நல்லெண்ணெய்யை சூடாக்கி அதை கழுத்து பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். அதன் மூலம் ரத்த நாளங்கள் நன்றாக இயங்குவதுடன் ரத்த ஓட்டம் சீராசி சருமத்தில் உள்ள சுருக்கஙகள் நீங்கும்.

கழுத்தின் அணியும் நகைகளை  3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது முக்கியம். கவரிங் நகைகளை அணியும் போது அவற்றால் ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் தொடர்ச்சியாக அணியும் போது அவற்றின் நிறம் மாறியிருந்தாலோ பாசி படர்ந்திந்தாலோ அவற்றை பயன்படுத்தக்கூடாது நகைகளை கழற்றிய பின்னர் குளிர்ந் நீரால் கழுத்தை சுற்றிலும் கழுவுவது நல்லது.

உடல் பருமன் கொண்டவர்களின் கழுத்தை சுற்றிலும் அதிக சதை வளர்ச்சி ஏற்படும். அது கழுத்தின் அழகை குறைக்கும். தகுந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் கழுத்தை அதுகாக மாற்ற முடியும். அதற்கான பயிற்சிகளை இங்கே பார்க்கலாம்.

காலை அல்லது மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இந்த பயிற்சிகளையும் சேர்த்து செய்யலாம்.

* தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும கீழுமாக 5 முறை அசைக்க வேண்டும்.

*நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறமாக திருப்பி சில நொடிகள் அப்படியே இருந்து பின்னர் மீண்டும் நேராக பார்க்க வேண்டும். இதே போல் இடது புறமும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம்.

* கைகளை தாடை மேல் வைத்து கழுத்தை பின்னால் சாய்த்து சில நொடிகள் கழித்து கழுத்தை நேரக்க வேண்டும். இதனால் நரம்புகள் மற்றும் சருமத்தில் உள்ள இறுக்கம் அகலும். இதையும் 5 முறை செய்யலாம்.

* கைகளை கழுத்தின் பின்பக்கத்தில் வைத்த படி கழுத்தை முன்பக்கமாக சாய்க்க வேண்டும். இதையும் 5 முறை செய்யலாம்.

* மேற்கண்ட பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ரத்த ஓட்டமும், கழுத்து தசையின் வளர்ச்சியும் சீராகி அழகிய சங்கு போன்ற கழுத்தை பெற முடியும்.

Sharing is caring!