இழந்த முடியை உடனே வளர.. தினமும் 1 மணிநேரம் இதை தேய்த்து குளியுங்கள்!

தலை முடி உதிர்தல் மற்றும் தலைமுடி அடர்த்தி குறைதல் ஆகிய பிரச்சனைகள் இப்போது பெரும்பாலானோருக்கு இருக்கிறது.

மேலும், கண்ட கண்ட ஷாம்புகளையும், எண்ணெய்களையும் தலையில் தடவினால் முடியின் வேர்க்கால்கள் பாதிப்படைந்து வெகு விரைவாக முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.

உண்ணும் உணவு உட்புறமும், சூழ்நிலை வெளிப்புறமும் தொடர்ந்து பிரச்சனைகளை கொடுப்பதால் இளம் வயதிலேயே தலை முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.

இயற்கையாக எளிய முறையில் எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு – 1
  • செம்பருத்தி பூ பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெள்ளை கரிசலாங்கண்ணி – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கருவேப்பிலை பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
  • நெல்லிக்காய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை – அரை மூடி

செய்முறை விளக்கம்

முதலில் நாம் எடுத்துக் கொள்ளும் உருளைக்கிழங்கு அதிக அளவு புரோட்டீன் சத்து கொண்டுள்ளது. இதிலிருக்கும் புரோட்டீன்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு பலத்தை கொடுக்கும்.

முடி உதிர்தல் பிரச்சினைக்கு வேர்க்கால்கள் பலம் இழப்பது தான் முதல் காரணமாக இருக்கின்றது. எனவே அதற்குரிய பலத்தைக் கொடுத்து இழந்த வளர்ச்சியை தூண்டிவிட செய்யும். இதில் சேர்க்கப்படும்

நெல்லிக்காய் பொடி அதிக அளவில் விட்டமின் சி யை கொண்டுள்ளது. விட்டமின் சி முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து முடி உதிர்தல் பிரச்சனையை சட்டென நிறுத்தும். மேலும், கறிவேப்பிலையில் இருக்கும் கரோட்டினாய்டு நரை முடியை சரி செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது.

முடி அடர்த்தியாக வளரவும் உதவி செய்யும். கறிவேப்பிலை எந்த அளவிற்கு முடி வளர்ச்சிக்கு உகந்தது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி பூ பொடி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி இரண்டுமே அதிக அளவிற்கு உதவி செய்யக் கூடியது ஆகும்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள அத்தனை பொருட்களும் நம் தலை மண்டையோட்டு பகுதியில் இருக்கும் ஒவ்வொரு செல்களையும் தூண்டிவிட்டு புதிதாக முடி வளர்ச்சியை அதிகரிக்கும். ஒரு பவுலில் அரை உருளைக்கிழங்கை சீவி போட்டுக் கொள்ளுங்கள்.

அதில் மற்ற அனைத்து பொடிகளையும் தலா ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்து இறுதியாக அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். எலுமிச்சை இறந்த செல்களாக இருக்கும் பொடுகை நீக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.

இவற்றுடன் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரை சிறிதளவு சேர்த்து பேஸ்டாக குழைத்து தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி கொள்ளுங்கள்.

அதன்பின் ஒரு மணி நேரம் ஊறவைத்து பின்னர் சாதாரண தண்ணீரில் தலைக்கு அலசலாம். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால் போதும்! ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

Sharing is caring!