ஆரோக்கியம் நிறைந்த வெண்ணெய் புட்டு செய்முறை

மாலை நேரத்தில் சாப்பிட உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவான வெண்ணெய் புட்டு செய்து கொடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு – 1/2 கப்
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – தேவையான அளவு
உப்பு – 1 ஸ்பூன்
ஏலக்காய்
தேங்காய் பூ – சிறிதளவு
நெய் – 1 ஸ்பூன்

செய்முறை: முதலில் அரிசி ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அரிசி நன்கு ஊறியதும் அதை நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அரிசி அரைக்கும் இந்த நேரத்தில் பருப்பை ஊற வைத்து விடுங்கள். அதன் பின் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வையுங்கள். வெந்ததும் அரைத்து வைத்துள்ள அரிசியை அதில் போட்டு நன்கு கிளறி கொடுங்கள். இல்லையென்றால் அடிபிடித்துவிடும்.

இப்படி கிளறிக்கொண்டே இருக்க சில நிமிடங்களில் வெந்த நிலைமைக்கு வரும். அந்த சமயத்தில் வெல்லம் சேர்த்துக் கொடுங்கள். அதன் பிறகும் நன்குக் கிளறிக் கொண்டே இருங்கள். அதன்பின் ஏலக்காய், உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். கடைசியாக நீங்கள் துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலை போட்டு நன்கு கிளறுங்கள். அதோடு ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொடுங்கள். இப்போது சுவையான வெண்ணெய் புட்டு தயார். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.

Sharing is caring!