பழங்களை கொண்டு முகத்தை எப்படி மெருகேற்றிக்கலாம்??

பல வகையான பழங்கள் இந்த பூமியில் இருந்தாலும், அதில் ஒரு சில மட்டுமே மனிதனுக்கு பயன்படுகிறது. ஒரு சில பழங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த்தும், ஒரு சில பழங்கள் முக அழகை கூட்டும். அந்த வகையில் ஒரு அரிய வகை பழம் இருக்கிறது. இது முக அழகு முதல் முடியின் ஆரோக்கியம் வரை அனைத்திற்கும் பயன்படுகிறது.

இயற்கையான முறையில் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க, பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது. சருமத்தின் பொலிவை அதிகரிக்க சிட்ரஸ் பழங்கள் மிகவும் சிறந்தது. குறிப்பாக அவற்றின் தோல்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

பழத்தை கொண்டு செய்யப்படும் சில முக்கிய அழகியல் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் –

முக பருக்களை நீக்க

முகத்தின் அழகை கெடுப்பதில் முதல் இடத்தில் இருப்பது இந்த முகப்பருக்கள் தான். இதனை நீக்க பல வகையான வேதி பொருட்கள் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள். பருக்களை நீக்க ட்ராகன் பழத்தை நன்கு அரைத்து முகத்தில் பஞ்சை கொண்டு பூசி வந்தாலே போதும். இது விரைவிலே நீங்கி விடும்.

முகம் மென்மையாக மாற

முகம் மென்மையாக மாறுவதற்கு வெள்ளரி சாற்றை சுமார் இரண்டு தே.கரண்டி அளவிற்கும்., புதினா சாற்றை அரை தே.கரண்டி அளவிற்கும்., எலுமிச்சை பழச்சாற்றை அரை தே.கரண்டி அளவிற்கும் எடுத்து கொண்டு தேய்த்து சுமார் 15 நிமி. கழித்த பின்னர் கழுவினால் முகமானது மென்மையாக மாறும்.

சருமம் பளிச்சிட

தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் போன்று மின்னும். இந்த முறையினை தினமும் செய்து வர சருமம் ஆரோக்கியமாக இருக்கும், அதேபோல் என்றும் சருமம் பளிச்சென்று இருக்கும்.

எண்ணெய் பசை நீங்க

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் 1 டீஸ்பூன் கடலை மாவுடன் 2 டீஸ்பூன் முலாம் பழ கூழ், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பசை போல் ஆக்கி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். அதன் பிறகு கற்றாழை ஜெல் தடவலாம்.

கண் பார்வை

கண்களின் ஆரோக்கியம் காக்கவும் முலாம் பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது. அதிலிருக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட் பீட்டா கரோட்டின், ஜியாசாந்தைன் போன்றவை கண் பார்வை திறனை மேம்படுத்த உதவும்.

கருவளையம் நீங்க

100 கிராம் எலுமிச்சை பழத்தில் 53 கிராம் வைட்டமின் சி சத்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சையுடன் தேன் சேர்த்து நீங்களே முக பொலிவிற்கான ஃ பேஸ் பேக்கை செய்யலாம். கரு வளையம் போன்ற தேவையற்ற செல்களை இது நீக்கும்.

Sharing is caring!