முகத்தில் அதிகமாக மச்சம் இருக்கா?

பொதுவாக மச்சம் என்பது நிறமி செல்கள். இது சருமத்தில் கருமையான புள்ளிகளாக தோன்றும். இது தோலின் மேல் மற்றும் அதன் கீழ் அடுக்குகளில் உருவாகின்றன. இது முகம், கழுத்து, கைகள் மற்றும் கால்களில் வரலாம்.

மச்சத்தின் நிறம் மற்றும் வடிவமானது ஒவ்வொருவருக்கும் இடையில் மாறுபடும். இது சிவப்பு, கருப்பு, பழுப்பு, இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் இருக்கலாம். சிலருக்கு இது அதிகமாக காணப்படும்.

அவர்கள் செலவின்றி இதனை நீக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.அந்தவகையில் முகத்தில் இருக்கும் அதிகப்படியான மச்சத்தை எப்படி போக்கலாம் என்பதை பார்ப்போம்

  •  ஆப்பிள் சீடர் வினிகரை பருத்தி பஞ்சில் நனைத்து மச்சம் இருக்கும் இடத்தில் வைக்கவும். பிறகு அந்த பஞ்சு கீழே விழாமல் இருக்க அதன் மேல் டேப் ஒட்டி விடுங்கள். 5 அல்லது 6 மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு டேப் நீக்குங்கள். மச்சம் மறைந்து வடுவை உண்டாக்கும் வரை அந்த பகுதியை சுத்தம் செய்து விடவும்.
  • பேக்கிங் சோடா அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதில் விளக்கெண்ணெய் சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும். இதை மச்சம் மேல் தடவி அதன் மேல் பேண்ட் எய்ட் போடவும். இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை பேண்ட் எய்ட் எடுக்கவும். தினமும் இதை செய்து வரலாம்.விளக்கெண்ணெய் மச்சம் நீங்கிய சருமத்தை வடுக்கள் இல்லாமல் இருக்க செய்கிறது.
  •  வாழைப்பழத்தோலை சிறிய துண்டாக நறுக்கி மச்சம் இருக்கும் இடத்தில் வைத்து அதன் மேல் டேப் போட்டு விடவும். இது இரவு முழுவதும் இருக்கட்டும். மச்சம் மறையும் வரை இதை வைக்கலாம்.
  •    பூண்டு ஒரு பல் எடுத்து அதை தோல் உரித்து இடிக்கவும் சாறு வெளியேறாமல் இருக்கும் போதே அதை மச்சம் மீது வைத்து மெல்லிய சுத்தமான வெள்ளைத்துணியை மச்சத்தின் மேல் உள்ள பூண்டின் மீது வைத்து ஒட்டி விடவும். இதையும் இரவு முழுக்க விட வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்யலாம். மச்சம் விழும் வரை தொடர்ந்து செய்து வரலாம்.  பூண்டு விழுது வடு உருவாவதை தடுக்கு மச்சத்தை மறைக்க செய்யும். பூண்டு சருமத்தில் இலேசான எரிச்சலை தரலாம்.
  •   மஞ்சள் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வைட்டமின் சி மாத்திரை வாங்கி பொடித்து மஞ்சளுடன் கலந்து தேன் ஒரு துளி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை மச்சத்தின் மீது தடவி 20 நிமிடங்கள் அப்படியே உலரவிடவும். பிறகு வெற்றுநீரில் கழுவிஎடுக்கவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை இதை செய்து விடவும். வைட்டமின் சி மாத்திரை மச்சத்தை வெளியேற்றும். மஞ்சள் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும்.
  •     கொத்துமல்லி இலைகளை வாங்கி சுத்தம் செய்து அரைத்து பேஸ்ட் போல் ஆக்கவும். இதை மச்சம் மீது தடவி இரண்டு மணி நேரம் கழித்து வெற்றுநீரில் கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு முறை இதை செய்யலாம். கொத்துமல்லி இலைகளை மேற்பூச்சுடன் பயன்படுத்தும் போது சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பிறகு அவை மச்சம் இருக்கும் பகுதியில் உஷ்ணத்தை உண்டாக்கி மச்சத்தை வெளியேற்றுகின்றன.
  •    சுத்தமான தேனை எடுத்து மச்சம் மீது தடவி அதன் மேல் டேப் போட்டு ஒட்டவும். ஒரு மணீ நேரம் கழித்து டேப்பை நனைத்து பொறுமையாக அகற்றவும். இந்த பகுதியை தண்ணீரில் கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை செய்யலாம். தேன் சரும நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. விரைவில் மச்சத்திலிருந்து விடுதலை அளிக்கும்.

Sharing is caring!