வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்பை சரி செய்ய வேண்டுமா?

கோடையில் கொளுத்தும் வெயிலால் தோல் பெரிதும் பாதிக்கும். தோலில் கருமை நிறம் ஏற்படும்.

குறிப்பாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி அதிக வெயிலால் தோலில் ஏற்படும் எரிச்சல், சிவப்பு தன்மை, கொப்பளங்கள், வியர்குரு போன்றவை ஏற்படும்.

இதனை வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • வெயிலால் சருமத்தின் புத்துணர்ச்சி குறையும். அப்போது பாலில் ரோஜா இதழ்களை சிறிது நேரம் ஊறவைத்து அதை முகத்தில் தடவி கழுதி வந்தால் புதுப்பொலிவு ஏற்படும்.
  • நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் மிருதுவாகும். சந்தனம், பால், கடலை மாவு, மஞ்சள் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறும்.
  • தேங்காய் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும். பன்னீர், சந்தனம், உலர்ந்த ரோசா இதழ்கள் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், தோலின் நிறம் பொலிவு பெறும்.
  • வேப்பிலை, துளசி மற்றும் புதினா இலைகளை சமமாக எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு தேக்கரண்டி எடுத்து பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
  • கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமானால் தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம் பழச்சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளித்தால் நாளடைவில் கருமை நிறம் போய்விடும். தோல் வறண்டும் சுருங்கியும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி சிறிது நேரம் ஊறவைத்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
  • வெயிலினால் ஏற்பட்ட கருமை மறைய ஆரஞ்சுப் பழத் தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, பாலுடன் கலந்து தோலில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வரவேண்டும்.

Sharing is caring!