தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயம் ஹேர்பேக்

தலைமுடி வளர்ச்சியினை சரிசெய்வதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த வெங்காயத்தில் இப்போது ஹேர்பேக் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு கண்டிப்பாக உதவும்.

தேவையானவை:

சின்ன வெங்காயம்- 3
இஞ்சி துண்டு- 1 துண்டு
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்
கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்

செய்முறை: சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். அடுத்து இதனை மிக்சியில் போட்டு வெங்காயம் மற்றும் இஞ்சியை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்தால் ஹேர்பேக் ரெடி.

இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

Sharing is caring!