முடி உதிர்வு பிரச்னையை தீர்க்க உதவுகிறது உருளைக்கிழங்கு சாறு

ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம், தண்ணீர், இரசாயனம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் இரசாயனம் மிகுந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது மேலும் கூந்தல் உடைந்து, முடி கொட்ட ஆரம்பிக்கும். முடி உதிர்வு பிரச்சனைக்கு எவ்வித இரசாயனங்களையும் பயன்படுத்த வேண்டாம்.

இயற்கை பூக்கள், காய்கறிகள் கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறலாம். உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. முடி வளர்ச்சிக்கு இது சிறந்த தீர்வு. சருமம் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு கொலாஜன் மிகவும் தேவையான ஒன்று. உருளைக்கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியடையும். கூந்தலில் அதிகபடியான எண்ணெய் இருந்தாலும் கூந்தல் உடையும். உருளைக்கிழங்கில் அதிகபடியான ஸ்டார்ச் இருப்பதால் கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு மிகவும் நல்லது.

ஸ்கால்ப் வறண்டு போனால் பொடுகு தொந்தரவு ஏற்பட்டு கூந்தலின் அடர்த்தி குறைந்துவிடும். உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கால்பில் தடவி வந்தால் வறட்சி நீங்கிவிடும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மயிர்கால்களில் படும்படி உருளைக்கிழங்கு சாற்றை தடவி வரலாம்.

Sharing is caring!