மூக்கின் மேல் உள்ள கருப்பு புள்ளிகளை அகற்றனுமா?

சிலருக்கு மூக்கில் கருப்பு அல்லது வெள்ளை புள்ளிகள் இருக்கும். இது மூக்கின் பக்கவாட்டிலும், மூக்கின் மேலும் இருக்கும். இதனால் முகத்தின் அழகு கெடும், இவற்றை போக்க வீட்டிலேயே செய்ய கூடிய சில வழிமுறைகள் உள்ளன.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, அதனைக் கொண்டு சொரசொரவென்று உள்ள கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நன்கு தேய்த்து, பின் நீரில் கழுவி, துணியால் அழுத்தி துடைத்தால், கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

தேன்

தேன் கூட கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு தேனை இலேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி இலேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

பேக்கிங் சோடா

அரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா உடன் தண்ணீரை கலந்து, பேஸ்டாக கலந்து கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். இது உலந்த பிறகு குளிர்ச்சியான நீரினால் கழுவி விட வேண்டும்.

தக்காளி

தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் போய்விடும்.

மஞ்சள்

தண்ணீரில் மஞ்சளை கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி, 20 முதல் 25 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் இதனை கழுவி விட வேண்டும்.

Sharing is caring!