முகத்தை அழகாக்க காபி பொடியை பயன்படுத்த உங்களுக்கு சில டிப்ஸ்!!!

காபி பொடியை பயன்படுத்தி 5 முறைகளில் முகத்தை அழகு படுத்த உதவும் பேஸ் பேக் எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காபி தூள், ஏலக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், சர்க்கரை ஆகிய நான்கு பொருள்களையும் நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை முகம் மட்டுமல்லாது கை, கால்களிலும் தேய்த்து 30 நிமிடம் கழித்து மிதமான நீரில் குளித்து வந்தால் முகம் பளபளக்கும்.

ஐந்து ஸ்பூன் கற்றாழையை எடுத்து நன்கு மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி கலந்து முகத்தில் 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி செய்து வந்தால் முகம் மினுமினுக்கும்.

ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் ஆகியவற்றை 4 ஸ்பூன் காபி தூளில் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இப்படி செய்து வந்தால் முக கருமை மாறி முக பொலிவை அதிகரிக்கும்.

2 டீஸ்பூன் காபி பொடியில் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 15 நிமிடங்களுக்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பளபளக்கும்.

4 ஸ்பூன் பட்டர், 4 ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை முகத்தில் மட்டுமல்லாது கை, கால், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை இந்த முறைகளில் எதாவது ஒன்றை செய்து வந்தால் முகம் பளிச்சிடும்.

Sharing is caring!