முகம் பளிச்சென்று மாற எளிய முறையில் பேஷியலை வீட்டிலேயே செய்யும் முறை

பார்லரில் செய்வது போல் ஃபேஷியலை நாம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

முட்டை- 1
கான்பிளவர் மாவு- 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
தேன்- 1 ஸ்பூன்

செய்முறை: முட்டையினை உடைத்து அத்துடன் கான்பிளவர் மாவு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். அடுத்து இந்தக் கலவையுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி நன்கு ஊறவிட்டு முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவினால் பார்லரில் செய்வது போல் முகம் பளபளன்னு மாறிவிடும்.

Sharing is caring!