ஜப்பானிய பெண்களின் அழகிற்கு காரணம் இந்த ஒரு பொருள் தானாம்!

நெல்லின் மேலோட்டை நீக்கி விட்டு, குறைந்த அளவு தோலோடு இருக்கும் அரிசி தான் பழுப்பு அரிசி. இதனை கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர்கள்.

வைட்டமின் பி 1 , பி 2 , பி 3 , பி 6, வைட்டமின் ஈ , வைட்டமின் கே போன்றவை பழுப்பு அரிசியில் அதிகமாக உள்ளது.

புரத சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவ்வளவு நன்மைகள் கொண்ட பழுப்பு அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. நமது அழகும் அதிகரிக்கிறது.

ஜப்பானியர்களின் இளமை மாறா சருமத்திற்கு அவர்கள் நம்புவது இந்த ஊற வைத்த அரிசி நீர் மட்டுமே.

தேவையான பொருட்கள்

  1. ½ கப் பழுப்பு அரிசி
  2. 1 கப் தண்ணீர்
  3. பஞ்சு

செய்முறை

அரிசியை அழுக்கு நீக்கி சுத்தமாக கழுவி கொள்ளவும். அரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றவும். பின் 15 நிமிடம் ஊற விடவும்.

பிறகு அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய நீரில் பஞ்சை நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி சுத்தம் செய்யவும்.

பின்பு மென்மையாக மசாஜ் செய்யவும். 10 நிமிடம் நன்றாக காய விட்டு பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவவும்.

தினமும் இதனை தொடர்ந்து செய்து வர முகம் பளிச்சிடும்.

இது பழுப்பு அரிசி சருமத்தில் இருக்கும் திட்டுகளையும் துவாரங்களையும் குறைக்க பெரிதும் உதவும்.

Sharing is caring!