முகத்தில் சுருக்கம், கரும்புள்ளிகளை மறைய பாசிப்பருப்பை பயன்படுத்துங்கள்

பாசிப்பருப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கம், கருமை, கரும்புள்ளிகள் ஆகியவை மறைந்து சருமம் பளபளப்பாகும்.

முதலில் தேவையான அளவு பாசிப்பருப்பை எடுத்து அதனை மிக்சி ஜாரில் போட்டு நன்கு பவுடர் பண்ணி வைத்து கொள்ளுங்கள். இந்த பவுடரை ஒரு காற்று புகாத ஒரு சிறு டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்து விடுங்கள். இந்த பவுடரை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒரு ஸ்பூன் பாசி பருப்பு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் தேய்த்து விடுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் முகம் நல்ல நிறத்துடன் தோன்றும். இது மிக மென்மையான சருமத்தையும், அழகையும் உங்களுக்கு தரும்.

1 ஸ்பூன் பாசிப்பருப்பு பொயை எடுத்து அதனை ஆலிவ் எண்ணெயுடன் குழைத்து தினமும் முகத்தில் தடவி கொள்ளுங்கள். இதை 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்யும் போது, வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் ஏற்படும் மேடு பள்ளம் போன்ற அமைப்பு நீங்கும் மற்றும் முகம் பளிச்சென்று தோன்றும். இதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பு, கசகசா, பிஸ்தா, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து, நன்கு காய்ந்த பின் பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசி 25 நிமிடங்கள் கழித்த பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுகள் காணாமல் போகும்.

Sharing is caring!