கண்களை சுற்றியுள்ள சுருக்கத்தை போக்க வேண்டுமா?

கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நாமோ இந்த பகுதிக்கு அதிகமான கவனத்தை செலுத்துவது இல்லை.

இதனால் கருவளையங்கள், வீங்கிய கண்கள், கண் சுருக்கம் மற்றும் சோர்வான கண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அதிலும் இளவயதிலே கண்களை சுற்றி சுருக்கம் ஏற்பட்டால் அது பார்ப்பதற்கு மிகவும் வயதான தோற்றத்தை தரும்.

எனவே இதனை எளியமுறையில் போக்குவது நல்லது. அந்தவகையில் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை எப்படி போக்கலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • வெள்ளரிக்காயை அரைத்து சாற்றை பிழிந்து அதில் சில துளி பன்னீர் கலந்து விடவும். பிறகு சுத்தமான காட்டன் பஞ்சை நனைத்து கண்களின் கீழ் வைக்கவும். 20 நிமிடங்கள் வரை வைத்து கழுவி எடுக்கவும். இந்த நீரை ஐஸ்க்யூப் செய்தும் பயன்படுத்தலாம். கண்கள் குளிர்ச்சியாக இருப்பதை உணர்வீர்கள்.
  • ஒரு டீஸ்பூன் காபியில் தேன் கலந்து வைட்டமின் ஈ மாத்திரை ஒன்றை கலந்து பேஸ்ட் ஆக்கவும். இதை கண்களுக்கு கீழ் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விட வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் கண்களை சுற்றி இருக்கும் கருமை மறையும். சுருக்கமும் நீங்கி இருக்கும். கண்கள் பளபளவென்று இருக்கும்.
  • அன்னாசி பழத்துண்டுகளை மசித்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு கலக்கவும். இதை கண்களுக்கு கீழ் அரைமணி நேரம் தடவி விடவும். பிறகு கண்களுக்கு பயன்படுத்தப்படும் பிரத்யேகமான க்ரீம் வகைகள் பயன்படுத்தலாம். கண்களுக்கு உள்ளே செல்லாமல் கவனமாக பயன்படுத்துங்கள்.
  • தயிர் கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். ஈரப்பதமாக மென்மையாக வைத்திருக்கும். இரண்டு பொருள்க்ளையும் சம விகிதத்தில் கலந்து கண்களை சுற்றி 15 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும் பிறகு குளிர்ந்த நீரில் கண்களை கழுவி விடவும். கண்களில் உண்டாகும் அழகு சார்ந்த குறைபாட்டுக்க்கு இது தீர்வாகிறது.
  • புதிய கற்றாழை ஜெல்லை பிரித்து அதில் காட்டு ரோஜா எண்ணெய் சம அளவு கலந்து சேர்க்கவும். பேஸ்ட்டை கண்களுக்கு கீழ் வைத்து மசாஜ் செய்து விடவும். தினமும் இரவில் இதை செய்யலாம்.

Sharing is caring!