தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? சில டிப்ஸ்

தலைமுடி ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய தலைமுடியில் ஏராளமான பிரச்சனைகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர்.

அதில் ஒன்று தலைமுடி அதிகம் உதிர்ந்து, முடியின் அடர்த்தி குறைவாக காணப்படுவது.

இதற்கு காரணம் ஹார்மோன்கள், மோசமான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவையுடன், சரியான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பதும் முக்கியமானவைகளாகும். இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பார்க்கவும்.

தற்போது முடி அடர்த்தியை அதிகரிக்க செய்யும் சூப்பரான டிப்ஸ் பற்றி இங்கே பார்ப்போம்.

நெல்லிக்காய் பொடியை நீர் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி வந்தால், தலைமுடியின் அடர்த்தி அதிகிரிக்கும்.

உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை வாரத்திற்கு 2-3 முறை தலையில் தடவி ஊற வைத்து அலசி வர, தலைமுடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு, முடி சம்பந்தமான பிரச்சனைகளும் அகலும்.

விளக்கெண்ணெய்யும் ஓர் அற்புதமான தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் பொருள். இதற்கு இதில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் தான் காரணம். இந்த அமிலங்கள் பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, நல்ல பாதுகாப்பையும் வழங்கி, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியையும் கூட்டும்.

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி வாரம் 2 முறை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு 3 முறை தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து அலசினால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

கறிவேப்பிலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், தலையில் இருக்கும் பொடுகு நீங்குவதோடு, முடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

Sharing is caring!