முகப்பரு வடுக்களை போக்கும் மஞ்சள்!

பெரும்பாலும் முக அழகை கெடுப்பதில் முகப்பரு மற்றும் பருக்களில் வரும் வடுக்களுக்கு முக்கிய இடம் உண்டு.

இந்த வடுக்களை போக்க அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் மஞ்சளை கொண்டு கூட எளியமுறையில் சரி செய்ய முடியும்.

அந்தவகையில் மஞ்சளை கொண்டு எப்படி முகப்பரு வடுவை போக்கலாம் என பார்ப்போம்.

  • முகப்பரு வடுக்களை நீக்க அரை டீஸ்பூன் பன்னீருடன் சிட்டிகை மஞ்சள் கலந்து விடவும். இதை நேரடியாக முகப்பரு வடுக்கள் மீது தடவி விடவும். இயற்கையாக இதை உலரவிட்டு பிறகு வெற்று நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். முகப்பரு வடுக்கள் வேகமாக குறைய தினமும் இதை செய்யலாம்.
  •  பன்னீர் சருமத்துக்கு குளிர்ச்சியை தரக்கூடியவை. சருமத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்யகூடியவை. ரோஸ் வாட்டர் மற்றும் ரோஸ் எண்ணெய் போன்றவற்றில் கெரடினோசைட்டுகளின் தோல் செல்களை தூண்டும். இது புதிய செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  • மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் அளவு எடுத்து எலுமிச்சை சாறு நீர்த்தது சேர்த்து மென்மையான பேஸ்ட் செய்து முகப்பரு இருக்கும் இடங்களில் மட்டும் பயன்படுத்துங்கள். இது வறட்சியாக மாறும் வரை விட்டு பிறகு மந்தமான நீரில் கழுவி எடுங்கள் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை வரை செய்யவும்.
  • ஒரு டீஸ்பூன் கெட்டித்தயிரில் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு குழைத்து விரல் நுனியில் மென்மையாக மசாஜ் செய்து விடவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு முறை இதை செய்யலாம்.
  •  காய்ச்சாத பால் 1 டீஸ்பூன் எடுத்து மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் அளவு கலந்து மென்மையான பேஸ்ட் பதத்துக்கு குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி எடுக்கவும். இவை உலரும் வரை வைத்திருந்து பிறகு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். வாரம் ஒருமுறை முகப்பரு வடுக்களின் மீது பற்றுபோல் போடலாம். தினமும் ஒரு முறை இதை செய்து வந்தால் வடுக்கள் நீங்கும்.
  •  மஞ்சள் தூளுடன் தேன் கலந்து நன்றாக குழைத்து பேஸ்ட் போல் ஆக்கவும். இதை முகப்பரு முகம் மற்றும் கழுத்துப்பகுதியிலும் சமமாக தடவலாம். பிறகு 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து முகத்தை மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். வாரத்தில் மூன்று முறை இதை செய்யலாம்.
  • மஞ்சள் தூளுடன் தக்காளி விழுதை சேர்த்து அரைத்து பேஸ்ட் ஆக்கவும். தக்காளியை மசித்து அதன் சாறை வடிகட்டி மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் ஆக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து விடவும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரவும்.

Sharing is caring!