ஃபிஜி தீவில் கடும் நிலநடுக்கம்…ரிக்டர் 8.2 ஆக பதிவு

இன்று காலை பசிபிக் கடலில் உள்ள ஃபிஜி தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது.

பசிபிக் கடலில் நியூசிலாந்து அருகே உள்ள ஃபிஜி தீவில் இன்று  காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

அங்கு 8.2-ஆக ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்பு, காயம் போன்ற எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

Sharing is caring!