அகதி அந்தஸ்தை கோரியுள்ளவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்

கனடாவில் அகதி அந்தஸ்தை கோரியுள்ளவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

கொன்சவேட்டிவ் கட்சியின் அரசியல்வாதிகள் அகதி அந்தஸ்தை கோரியுள்ளவர்களுக்கு அதிர்ச்சியூட்டு வகையில் செயற்பட்டு வருவதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனேடிய குடிவரவுத்துறை மற்றும் அகதிகள் தொடர்பான அமைச்சர் அஹமட் ஹசன் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“அகதிகள் தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கி கனேடிய பொதுமக்களை தவறான வழியில் இட்டு செல்ல கொன்சவேட்டிவ் கட்சியினர் முயற்சிக்கின்றனர். எனினும் அந்த தகவல்களில் உண்மைகள் எவையும் இல்லை.

கனடாவை பொறுத்தவரையில் அது கடுமையான வலுவான குடிவரவுக் கொள்கையை கொண்டிருக்கிறது. இதன்மூலம் கனேடிய மக்களையும் அகதிகளின் பாதுகாப்பையும் கனடா உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு உதாரணமாக சோமாலியாவில் இருந்து அகதியாக வந்த தாம், இன்று கனடாவின் அமைச்சராக செயற்படுவதையும் அஹமட் ஹசேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனேடிய பிரதமர் அண்மையில் அகதிகள் தொடர்பில் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்தே கனடாவுக்குள் அதிகமான அகதிகள் வருவதாக கொன்சவேட்டிவ் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தநிலையில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் சர்வதேசத்தின் பல்வேறு மாற்றங்களே அகதிகள் அதிகரிப்புக்கான காரணம்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!