அங்கீகாரம் பெறாத கட்சிகள்… ஆ.ராசா பேச்சால் மதிமுக, வி.சி கட்சிகள் டென்ஷன்

சென்னை:
அடுத்த சர்ச்சைக்கு திரியை கிள்ளி நெருப்பையும் பற்ற வைத்துள்ளார் திமுகவின் ஆ.ராசா. என்ன விஷயம் தெரியுங்களா?

‘தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெறாத கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறலாம்; ஆனால், அந்தக் கட்சிகளெல்லாம், லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்’ என ஆ.ராசா கூறியிருப்பது மதிமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்புகளெல்லாம், தி.மு.க.,வோடு நட்புணர்வோடு இருக்கும் கட்சிகள் தான்; கூட்டணிக் கட்சிகள் அல்ல’ என்று, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் கூறியதால் ஏற்பட்ட புகைச்சலே இன்னும் அடங்கவில்லை.

அதற்குள், தி.மு.க.,வின் கொள்கைப் பரப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா, புதிய திரியை கொளுத்தியிருப்பது, ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே அனலாகக் கொதிக்கிறது.

‘தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெறாத கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறலாம்; ஆனால், அந்தக் கட்சிகளெல்லாம், லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்’ என ஆ.ராசா கூறியிருப்பதுதான், புது சர்ச்சைக்கான விதை.

‘ஆ.ராசா, தங்களைத்தான், அங்கீகாரம் பெறாத கட்சி’ என குறிப்பிடுகிறார் என சொல்லி, ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தி.மு.க.,வுக்கு எதிராக கொந்தளிக்கின்றனர்.

‘இப்பவே இப்படியெல்லாம் பேசுகின்றனரே; தேர்தல் நெருக்கத்தில் என்னவெல்லாம் செய்யுமோ தி.மு.க.,’ என, அக்கட்சியினர் வருத்தத்தில் புலம்புகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!