அசத்தல்.. அதிக நிதி திரட்டி இந்திய வேட்பாளர்கள் அசத்தல்

வாஷிங்டன்:
அசத்தல்… அசத்தல்… இந்திய வேட்பாளர்கள் அசத்தி உள்ளனர். எங்கு தெரியுங்களா?

அமெரிக்க தேர்தலில் இந்திய வேட்பாளர்கள் 6 பேர் அதிகம் நிதி திரட்டி அசத்தினர். அமெரிக்காவில், பார்லிமென்ட் தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இந்த தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்கள், 12 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தேர்தல் பிரசாரத்துக்காக 189 கோடி ரூபாய் திரட்டியுள்ளனர். இதில் ஆறு பேர் தங்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை விட அதிகம் நிதி திரட்டியுள்ளனர்.

அமெரிக்காவில், தேர்தல் பிரசார நிதியை அதிகம் திரட்டுபவர்களே, தேர்தலில் வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு பேர், பார்லிமென்ட் உறுப்பினர்களாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!