அசாம் மாநிலத்தில் எலி கறி விற்பனை செம ஜோர்… கிலோ ரூ.200!!!

கவுகாத்தி:
எலிக்கறி… அசாம் மாநிலத்தில் இப்போது எலிக்கறிதான் செம விற்பனையாகி வருகிறது.

அசாம் மாநிலத்தி்ல் தற்போது எலிக்கறி சாப்பிடுவோர் அதிகரித்து வருவதால் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து எலிக்கறி வி்ற்பனை செய்யும் வியாபாரிகள் தெரிவித்துள்ளதாவது:

அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி செய்யும் தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. தேயிலை தோட்டங்களில் பணிபுரிவோர் குளிர்காலங்களில் பணியில்லாமல் இருக்கும் நிலையில் எலிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவர்களின் பணி இல்லாத நாட்களில் அன்றாட செலவை சமாளிக்கும் வகையில் இருந்து வருகிறது. ஆடு, மற்றும் கோழி இறைச்சிகளின் விலை உயர்ந்து வருவதால் இறைச்சி சாப்பிடுவோர் எலிக்கறிக்கு மாறி வருகின்றனர்.

இவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. வேகவைக்கப்பட்ட எலிக்கறி மற்றும் வாசனை பொருட்களுடன் வறுக்கப்பட்ட எலிகறி அதிகளவில் விற்பனை ஆகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!