அடுத்தாண்டில் ஆந்திராவில் தனி உயர்நீதிமன்றம் செயல்படும்!!!
திருப்பதி:
ஆந்திராவிற்கு தனி உயர் நீதிமன்றம் அடுத்தாண்டு முதல் செயல்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்தாண்டு முதல், ஆந்திர மாநிலத்திற்கு, தனி உயர் நீதிமன்றம் செயல்படத் துவங்க உள்ளது.
‘ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, 10 ஆண்டுகளுக்கு தலைநகர் மற்றும் உயர் நீதிமன்றங்கள் இரு மாநிலத்திற்கும் ஒன்றாக செயல்படும்’ என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஓராண்டிற்கு பின், ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்கி, ஐதராபாதில் செயல்பட்டு வந்த ஆந்திர தலைமை செயலகம், அமராவதிக்கு மாற்றப்பட்டது.
தற்போது, அமராவதியிலிருந்தே, ஆந்திர மாநிலத்தின் அனைத்துத்துறைகளும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், ஒன்றாக இருந்த உயர் நீதிமன்றங்களை பிரிக்கவும், ‘கெஜட்’ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.
இதன்படி, வரும், ஜனவரி முதல், ஆந்திராவுக்கான தனி உயர் நீதிமன்றம், ஆந்திர தலைநகர் அமராவதியில் செயல்பட துவங்க உள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி