அடுத்த சிபிஐ இயக்குனர் யார்? பிரதமர் அலுவலகம் தேர்வுப்பணியில் மும்முரம்

புதுடில்லி:
அடுத்த சிபிஐ இயக்குநர் யார் என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது… உள்ளது.

சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் பணியில் பிரதமர் அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தகுதியானவர்களின் பட்டியலை அளிக்கும்படி தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இருப்பினும், அலோக் வர்மாவின் பதவிக்காலம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடைகிறது. கோர்ட் தீர்ப்பு எப்படியிருந்தாலும், அடுத்த சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் பணியில் பிரதமர் அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!