அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜதான் வெற்றி பெறும்… கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடில்லி:
பாஜதான் அடுத்த லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது.

2019 லோக்சபா தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் குறித்து, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 543 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 38 சதவீத ஓட்டுகள் பெற்று மீண்டும் பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணிக்கு, 25 ஓட்டுகளும், மற்ற கட்சிகளுக்கு 37 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!