அடுத்த 20 ஆண்டுகளில் 2300 விமானங்கள் தேவை…!

புதுடில்லி:
அடுத்த 20 ஆண்டுகளில், உள்நாட்டில் விமான போக்குவரத்து அதிகரிக்கும்போது, 2,300 விமானங்களை கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த, முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான, ‘போயிங்’ நிறுவனம், நம் நாட்டுக்கு தேவையான விமானங்களை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின், இந்திய விற்பனை பிரிவுக்கான அதிகாரி, தினேஷ் கேஸ்கர் கூறியதாவது:

இந்தியாவில், ‘போயிங்’ நிறுவனம் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு மாதமும், சராசரியாக ஒரு கோடி பேர், உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

அடுத்த 20 ஆண்டுகளில், உள்நாட்டில் விமான போக்குவரத்து அதிகரிக்கும்போது, 2,300 விமானங்களை கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும். இவற்றின் மொத்த மதிப்பு, 22 லட்சம் கோடி ரூபாய். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!