அடுத்த 6 மாதத்துக்குள் சதொசவில் “ஒன்லைன்” மூலம் பொருட்கள்
நாடு முழுவதும் 398 சதொச விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும், இவற்றினூடாக அடுத்துவரும் ஆறு மாத காலத்துக்குள் “ஒன்லைன்” முறையில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு சொந்தமான பாரிய சில்லறை வர்த்தக நிறுவனமான சதொசவின் ஊடாக 31 பில்லியன் ரூபா வருமானமாக பெறப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருமானம் கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 16 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், 2019 ஆகும் போது நவீன வசதிகளின் பயன்பாட்டுடன் இதன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையை விஸ்தரிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S