அணுவாயுத ஒழிப்பு…ஐ.நா செயலர் அழைப்பு

அணுவாயுதங்களை முற்றாக ஒழிப்பது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

நாகசாகியில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டு 73 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் அதன்பொருட்டு நடத்தப்பட்ட ஞாபகார்த்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஒரு அணுவாயுத போர் பற்றிய அச்சம் இன்றும் நிலவுகிறது, ஐக்கிய நாடுகளுக்கு இது மிக உயர்ந்த முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயமாக இருப்பதாக குட்டர்ஸ் தனதுரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய நாகசாகி நகர முதல்வர் டொமிஹிசா டாயு, அணுவாயுதங்கள் அற்ற உலகத்தை வழிநடத்த அணுவாயுத களைவு நிகழ்ச்சித் திட்டத்திற்குள் ஜப்பான் அரசாங்கம் இணைந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.

ஐ.நா சபையில் இணைந்து கொள்ளாத, அணுவாயுத பாதிப்பால் மிகவும் அல்லலுற்ற நாடாக ஜப்பான் மாத்திரமே திகழ்கிறது.

ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் நாகசாகி தாக்குதல் பற்றிய அமைதியான ஞாபகார்த்த நிகழ்வில் செயலாளர் நாயகம் அன்டோனியா கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

Sharing is caring!