“அண்டை நாடுகளுடன் நட்புறவே இந்தியாவின் விருப்பம்”

காத்மாண்டு:
அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தவே இந்தியா விரும்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் வங்காள விரிகுடா ஒட்டிய நாடுகள் தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (ிம்ஸ்டெக்) மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றார்.

நேபாளம் சென்ற பிரதமர் மோடியை காத்மாண்ட் விமான நிலையத்தில் நேபாள மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியா இளைஞர்களை நம்பி உள்ளது. இளைஞர் பலம் இருப்பதால் மிக வேகமான முன்னேற்றத்தில் இந்தியா திகழ்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகவும், போதை மருந்து ஒழிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பருவநிலை மாற்றம் நமக்கு பெரும் சவாலாக உள்ளது. அமைதியே எங்கள் இலக்கு.

இதனால் நாங்கள் அண்டை நாடுகளுடன் நட்புறவையே விரும்புகிறோம். சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!