அதிகபட்ச வளர்ச்சி… ஜிடிபி வளர்ச்சி அதிகரிப்பு

மும்பை:
அதிகபட்ச வளர்ச்சி… வளர்ச்சி… என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2018-19ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதமானது 8.2 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் காலாண்டுக்கான ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி தற்போது 2018-19 – நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சியானது 8.2 சதவீதமாக இருந்தது.

இது கடந்த 2017-18ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 5.8 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த 8 காலாண்டுகளில் இதுதான் அதிகபட்ச ஜி.பி.டி. வளர்ச்சி விகிதமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!