அதிகரிப்பு… ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் எண்ணிக்கை..!

புதுடில்லி:
அதிகரிப்பு… அதிகரிப்பு… இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரி வாரியம் கூறியதாவது:

கார்பரேட் நிறுவனங்கள் உள்பட ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2014 – 15ம் ஆண்டில், 88,649 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2017 – 18 ல் , 1,40,139 ஆக அதிகரித்துள்ளது. இது 60 சதவீத உயர்வாகும்.

இதே போல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தனி நபர்களின் எண்ணிக்கை 48,416ல் இருந்து 81,344 ஆக அதிகரித்துள்ளது. இது 68 சதவீத உயர்வாகும். இதே போல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2013 – 14ல் 3.79 கோடியாக இருந்தது. இது, 2017 – 18 ல் 6.85 கோடியாக அதிகரித்துள்ளது. இது 80 சதவீத உயர்வாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!