அதிகரிப்பு… வருமான வரி தாக்கல் செய்பவர்களின் சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:
அதிகரிப்பு… அதிகரிப்பு… வருமான வரி தாக்கல் செய்பவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் காரணமாக, 2018 – 19 நிதியாண்டில், வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதித்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் மத்திய ஆணையம் (CBDT) தலைவர் சுஷில் சந்திரா கூறியதாவது: நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பயனுள்ளதாக இருந்தது. இந்த ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.98 கோடியாக உள்ளது.

ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு நேரடி வரி வளர்ச்சி விகிதம் 16.5 சதவீதமாகவும், நிகர நேரடி வரி வளர்ச்சி வகிதம் 14.5 சதவீதமாகவும் உள்ளது. கார்ப்பரேட் வரி செலுத்துவோர்களின் எண்ணிக்கையும் 8 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!