அதிகளவில் விசாரணை கைதிகள்… கோர்ட் கவலை

 

புதுடில்லி:
சிறைகளில் அதிகளவில் விசாரணை கைதிகள் உள்ளனர். அவர்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

நேற்று நடந்த ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள சிறைகளில், 67 சதவீதம், விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து, விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம், மிகவும் கவலை அளிக்கிறது.

விசாரணைக் கைதிகளுக்கான ஆய்வுக் குழு, 2019ல், இது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!