அதிகாரப்பூர்வமாக அழைக்கவில்லையாம்… அழைக்கவில்லையாம்

புதுடில்லி:
மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அழைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

அடுத்தாண்டு நடக்க உள்ள குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டது.

தொடர்ந்து ‘பணி நெருக்கடி காரணமாக, இந்திய குடியரசு தின விழாவில், அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க மாட்டார்’ என, வெள்ளை மாளிகை தெரிவித்தது. இந்நிலையில் நேற்று, ‘குடியரசு தின விழாவில் பங்கேற்கும்படி, மத்திய அரசு சார்பில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை’ என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!