அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு… தீர்ப்பு

நியூயார்க்:
வந்திடுச்சு… வந்திடுச்சு… ஆதரவாக தீர்ப்பு வந்திடுச்சு… அதிபர் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திடுச்சு.

சிரியா, ஈரான் உட்பட 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்த உத்தரவுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என்று அதிரடியாக அறிவித்தார். வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டன.

இதற்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரபட்டு, அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடையும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வழக்குகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், அதிபர் டிரம்ப் அறிவித்த பயணத்தடை சரியே என தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி கொண்ட 5 நீதிபதிகள் அமர்வில், நான்கு நீதிபதிகள் டிரம்ப் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பை “வாவ்” என குறிப்பிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!